Home இந்தியா “எல்லோருக்கும் வருவது தான்” – சோவிற்கு ஆறுதல் கூறிய ஜெயலலிதா! (காணொளி)!

“எல்லோருக்கும் வருவது தான்” – சோவிற்கு ஆறுதல் கூறிய ஜெயலலிதா! (காணொளி)!

606
0
SHARE
Ad

27-1440667870-cho-ramaswamy-jayalalitha--சென்னை – மூத்த பத்திரிக்கையாளரும், முதல்வர் ஜெயலலிதாவின் நண்பருமான சோ ராமசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை, ஜெயலலிதா நேரே சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில், அந்த காணொளி தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

தனது உடல் நலன் குறித்து நம்பிக்கை இழந்த வார்த்தைகளை கூறும் சோவிடம், “எல்லோருக்கும் வருவது தான். கவலைப்படாதீர்கள், நான் மருத்துவர்களிடம் பேசி விட்டேன். அவர்கள் உங்களுக்கு குணமாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்” என்று ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.

அதற்கு பதில் அளித்த சோ, “மன்னித்துவிடுங்கள். உங்களை கஷ்டப்படுத்தி விட்டேன்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“உங்களை சந்திப்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தான். எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை” என்று ஜெயலலிதா, சோவிடம் தெரிவித்தார்.

அந்த காணொளியை கீழே காண்க: