கோலாலம்பூர் – பெர்சே 4.0 பேரணிக்குத் திரண்டு வந்து கொண்டிருக்கின்ற கூட்டத்தின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும் அதே வேளையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் தொடர்ந்து செல்பேசிகளின் வழியும், நட்பு ஊடகங்களின் மூலமாகவும் தகவல்களையும், படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணி வரையில் கிடைக்கப் பெற்ற சுவாரசியமான சில படக் காட்சிகள் இங்கே வாசகர்களின் பார்வைக்காக:-
தலைநகர் சென்ட்ரல் வளாகத்தில் கூடத் தொடங்கியுள்ள மஞ்சள் ஆடை ஆதரவாளர்கள்..
பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் திரண்டிருக்கும் பெர்சே ஆதரவாளர்களுக்குத் தலைமையேற்றிருக்கும் வழக்கறிஞரும், முன்னாள் பெர்சே தலைவருமான அம்பிகா சீனிவாசன்…
“போலீஸ்கார அண்ணே! நீயும் நானும் நண்பர்கள்! நஜிப்புடன் மட்டும்தான் எங்களின் எதிர்ப்புப் போராட்டம்” என்ற அர்த்தத்திலான மலாய் வாசகத்தை ஏந்தியிருக்கும் பெர்சே போராட்டவாதி ஒருவர்..
கோலாலம்பூர், ஜாலான் புடு பகுதியில் மையம் கொண்டிருக்கும் பெர்சே ஆதரவாளர்களில் சிலர்
டத்தாரான் மெர்டேக்கா நோக்கிச் செல்லும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் குழுமியிருக்கும் பெர்சே ஆதரவாளர்கள்…
தொகுப்பு: செல்லியல்