Home இந்தியா ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி கோரி இன்று முழு அடைப்புப் போராட்டம்!

ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி கோரி இன்று முழு அடைப்புப் போராட்டம்!

644
0
SHARE
Ad

andera_2528337aஐதராபாத்- ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலத்தைப் பிரிப்பதற்கு முன் அளித்த வாக்குறுதிப்படி ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒரு நாள் ‘பந்த்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த பந்த் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் மாணவ அமைப்புகள் பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளதால்,ஆந்திராவில்  பேருந்துகள், ஆட்டோ மற்றும் லாரிகள் இயங்கவில்லை.

#TamilSchoolmychoice

பள்ளிக் கூடங்களும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் ஆந்திர மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பல்வேறு இடங்களில் திரண்டு நின்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.

தேசிய நெஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் பேருந்து – லாரி போன்றவற்றின் டயர்களைக் குவித்து எரித்து வருவதால் சாலையெங்கும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.

முழு அடைப்புப் போராட்டத்தால் கொல்கத்தா. சென்னை, பெங்களூர் செல்லும் தேசிய நெஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.