Home Featured நாடு பெர்சே 4.0: குளிர்பானத்தில் ஊசித் துளைகள்! குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு!

பெர்சே 4.0: குளிர்பானத்தில் ஊசித் துளைகள்! குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு!

645
0
SHARE
Ad

Bersih 4.0 - 2 - 5கோலாலம்பூர் – பெர்சே பேரணியில் வழங்கப்பட்ட குளிர்பானத்தில் ஊசித் துளைகள் இருப்பது பெர்சே மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

அக்குளிர்பானங்களைக் குடித்தவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு, வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து மருத்துவக் குழுவில் ஒருவரான நேசா பாலகிருஷ்ணன் கூறுகையில், “வழங்கப்பட்ட குளிர்பானங்களில் ஊசித் துளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் குளிர்பானங்கள் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. பேரணியில் பங்கேற்றவர்கள் அக்குளிர்பானங்களை அருந்திய போது துளைகள் இருப்பதைக் கவனிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.