Home Featured நாடு பெர்சே ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: நஜிப் குற்றச்சாட்டு

பெர்சே ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: நஜிப் குற்றச்சாட்டு

546
0
SHARE
Ad

najibகோலதிரங்கானு- பெர்சே பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில், குறிப்பாக கிராமப்புற மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் குற்றம் சாட்டி உள்ளார்.

கோலதிரங்கானுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பெர்சே பேரணியில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றதாகக் கூறினார்.

“ஆதரவாளர்களை திரட்டுவதென்பது பெரிய விஷயமல்ல. 20 ஆயிரம் பேரை மட்டுமலல், அதற்கு மேல் ஆயிரக்கணக்கானோரை கூட்ட முடியும். பேரணியில் பங்கேற்ற 20 ஆயிரம் பேரை தவிர, மீதமுள்ள மலேசியா முழுமையும் எனது அரசாங்கத்தை ஆதரிக்கிறது” என்றார் நஜிப்.

#TamilSchoolmychoice

பெர்சே பேரணியில் 20 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியானதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த 20 ஆயிரம் பேருக்கும் கூட அரசு மீது மிதமான அதிருப்தி மட்டுமே இருக்க முடியும் என்றார்.

“பெர்சே ஏற்பாட்டாளர்கள் மக்கள் நலன் குறித்து கவலைப்படவில்லை. அரசாங்கம் நினைத்தால் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஒன்றுகூட வைக்க முடியும். அப்படியிருக்கும்போது 20 ஆயிரம் பெரிய கூட்டமா?” என்று பிரதமர் நஜிப் மேலும் கேள்வி எழுப்பினார்.