Home உலக சினிமா திகில் படங்களின் மன்னன் வெஸ் கார்வின் மரணம்!

திகில் படங்களின் மன்னன் வெஸ் கார்வின் மரணம்!

580
0
SHARE
Ad

Wes Cravenலாஸ் ஏஞ்சல்ஸ் – ஹாலிவுட்டில், திகில் படங்களின் மன்னன் என அழைக்கப்படும் வெஸ் கார்வின் (76) நேற்று மரணமடைந்தார்.

ஹாலிவுட் திகில் படங்களின் வரிசையில் முக்கிய இடங்களைப் பிடித்து இருக்கும் ‘தி லாஸ்ட் ஹவுஸ் ஆப் தி லெப்ட்’ (The Last House of the Left), ‘நைட்மேர் ஆன் எல்ம் ஸ்ட்ரீட்’ (Nightmare on Elm Street), ‘ஸ்கிரீம்’ (Scream) போன்ற படங்களின் இயக்குனர் வெஸ் கார்வின். கடந்த சில மாதங்களாக மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியின் பாதிப்பால், பெரும் போராட்டங்களை சந்தித்த வந்த அவர், நேற்று லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.