Home இந்தியா பேஸ்புக்கின் மாயவலையில் இந்திய இராணுவம் – கண்காணிப்பை அதிகரிக்க முடிவு!

பேஸ்புக்கின் மாயவலையில் இந்திய இராணுவம் – கண்காணிப்பை அதிகரிக்க முடிவு!

531
0
SHARE
Ad

Facebook1புதுடில்லி  – இந்திய இராணுவவீரர்கள் சிலர், பேஸ்புக் மூலமாக அளவளாவும் (Chat) அறிமுகம் இல்லாத பெண்கள் சிலரிடம், இந்திய இராணுவம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்திய இராணுவத்தினரின் பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில், இராணுவ அதிகாரிகளின் சமூகவலைதள தொடர்புகளை கண்காணித்த இராணுவ உளவுத்துறை, பேஸ்புக்கின் மூலம் பின்னப்பட்டுள்ள சதிவலை பற்றிய தகவல்களை உயர்அதிகாரிகளிடம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில், “சில இராணுவ அதிகாரிகள் பேஸ்புக்கில், அறிமுகம் இல்லாத பெண்கள் சிலரிடம் தங்கள் இராணுவ செயல்பாடுகள் மற்றும் தகவல்களை பகிர்ந்த கொண்டுள்ளனர்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவர்களை தண்டிக்கவும் இராணுவ தலைமை பொறுப்பு முடிவு செய்துள்ளது. மேலும், இராணுவ அதிகாரிகள் எந்த விதத்திலும், நட்பு ஊடகங்களில் இராணுவம் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் மற்றும் சீன படைகள் இந்திய எல்லைகள் மீது தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், இது போன்ற சைபர் தாக்குதல்களும் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய உளவு அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.