Home உலகம் ஷியா படையினர் நால்வரை உயிருடன் எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்!

ஷியா படையினர் நால்வரை உயிருடன் எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்!

460
0
SHARE
Ad

fire_isis_001 பாக்தாத்-  ஷியா பிரிவுப் படையினர் நான்கு பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்று, அந்தக் கொடூரமான காணொளியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த நான்கு பேரும் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு, அவர்கள் நான்கு பேருக்கும் கீழே  தனித்தனியாக வாய்க்கால் போல் பள்ளம் தோண்டி அதில் பெட்ரோலை ஊற்றித் தீமூட்டிக் கொல்லப்பட்டுள்ள காட்சி பார்ப்போரைப் பதை பதைக்க வைக்கிறது.

அந்தக் காணொளியில் தோன்றும் முகமூடி அணிந்த பயங்கரவாதி, ஷியா படையினர் ஐஎஸ் தீவிரவாதி ஒருவனைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டுக் கொளுத்திக் கொன்றதற்குப் பழிக்குப் பழி வாங்கவே ‌ஷியா படையைச் சேர்ந்த அந்த 4 பேரையும் எரித்துக் கொன்றதாகக் கூறுகிறான்.

#TamilSchoolmychoice

அதற்கு ஆதாரமாக, ஷியா படையினர் ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை நெருப்பின் மேல் தலைகீழாகத் தொங்க விடப்பட்டிருக்கும் பழைய காட்சியும் அந்தக் காணொளியுடன் இணைக்கப்பட்டுள்ளது.