Home கலை உலகம் நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார்!

நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார்!

773
0
SHARE
Ad

Nayantara-660x330சென்னை – நடிகை நயன்தாரா மீது டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார்.

டி.ராஜேந்தர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாகத் தொடங்கப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’.

சிம்பு- நயன்தாரா காதல் முறிவுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து, சிம்புவோடு நயன்தாராவை நடிக்க வைத்துப் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட படம் தான் இது நம்ம ஆளு. படத் தலைப்பும் கூட அதற்கேற்றபடி வைத்தார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், பரபரப்பாகத் தொடங்கிப் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று எந்தப் பேச்சும் மூச்சும் இல்லாமல் அடங்கிப் போனது.

என்ன காரணம் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

இந்நிலையில், இத்தனை நாட்கள் கழித்து டி.ராஜேந்தர் திடீரெனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நயன்தாரா மீது நேற்று புகார் தெரிவித்துள்ளார்.

இது நம்ம ஆளு படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும், ஆனால் அதில் நயன்தாரா நடித்துத் தர மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீதத் தொகையைக் கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீதச் சம்பளம் மட்டுமே பாக்கி இருக்கிறது.

‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவிடம் இம்மாதம் ஐந்து நாட்களும், அடுத்த மாதம் ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.

பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியைக் கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்புக் கொடுத்துப் படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது புகார் மனுவின் நகல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.