Home Featured நாடு “நஜிப்பை வெளியேற்ற வேறு வழியில்லை” – பேரணியில் கலந்து கொண்டது குறித்து மகாதீர் கருத்து

“நஜிப்பை வெளியேற்ற வேறு வழியில்லை” – பேரணியில் கலந்து கொண்டது குறித்து மகாதீர் கருத்து

737
0
SHARE
Ad

bersih1கோலாலம்பூர் – நஜிப்பை வெளியேற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் பெர்சே 4.0 பேரணியில் பங்குபெற்றதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

“நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள் நான் பெர்சேவை ஆதரிக்கிறேனா? ஜசெக மற்றும் கிட் சியாங்கை ஆதரிக்கிறேனா? என்று. சிலர் நான் சீனர்களின் பக்கம் சாய்கிறேனா? என்றும் கேட்டார்கள்” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் இறங்கிப் போராடுவது, எந்த ஒரு அரசியல் நெருக்கடியும் ஏற்படுத்தாது மாறாக சிறு தொழில்களைத் தான் பாதிக்கும் என்று கூறி வந்த மகாதீர், கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் பெற்றார்.

#TamilSchoolmychoice

அதற்குக் காரணம் கூறியுள்ள மகாதீர், நஜிப்பை வெளியேற்றுவதற்கான எல்லா வழிகளையும் நஜிப்பே அடைத்துவிட்டார். தற்போதைய நிலையில் மக்களின் குரல் மற்றும் நாடாளுமன்றத்தில் நஜிப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவது, இவை இரண்டால் மட்டுமே அவரை வெளியேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

“அதனால் தான் வேறு வழியில்லாமல் பெர்சே பேரணியில் கலந்து கொண்டேன். அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நஜிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவளியுங்கள். அப்படி செய்தால் தேசிய முன்னணி வீழ்ந்துவிடாது. காரணம் அது இன்னும் பெரும்பான்மையில் தான் உள்ளது” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.