Home இந்தியா கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!

கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!

772
0
SHARE
Ad

sivajiaசென்னை: சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், தமிழக அரசு சார்பில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிவாஜி மண்டபம் கட்டும் வரை சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாகத் தமிழக அரசு என்ன முடிவெடுக்க உள்ளது? என இவ்வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளிக்க தமிழக அரசு இரண்டு வாரம் அவகாசம் கோரியது.

#TamilSchoolmychoice

இரண்டு வார கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், இன்று  நடந்த விசாரணையில் தமிழக அரசு,  சிவாஜி மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் சிவாஜி சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பதிலளித்தது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் பிரபு தனது குடும்ப உறுப்பினர்களுடன் தலைமைச்செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் முடிவிற்காகத் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

jaya_prabhu