Home Featured நாடு ரியூனியனில் கிடைத்தது எம்எச்370 பாகம் என்பது சந்தேகமே என்கிறது ஸ்பானிஸ் நிறுவனம்!

ரியூனியனில் கிடைத்தது எம்எச்370 பாகம் என்பது சந்தேகமே என்கிறது ஸ்பானிஸ் நிறுவனம்!

783
0
SHARE
Ad

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????கோலாலம்பூர் – எம்எச்370 விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி ஒருவழியாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இனி மற்ற பாகங்களும் ரியூனியன் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுவிடும். தங்கள் அன்பு உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மம் தெரியாமல் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகத் தவித்துக் கொண்டிருக்கும் பயணிகளின் உறவினர்களுக்கு விரைவில் ஒரு விடைக் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கையில், போயிங் 777 இரக விமானத்தின் இறக்கையை தயாரிக்கும் ஸ்பானிஸ் நிறுவனம் ஒரு அதிர்ச்சியானத் தகவலைத் தெரிவித்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் ஒருபகுதி, மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக முன்னணி செய்தி நிறுவனமான சிஎன்என் தெரிவித்துள்ளது.

மலேசியக் குழு மற்றும் பிரஞ்சு விசாரணை அதிகாரிகள் ஆகியோர் அந்த பாகத்தில் பதிவிடப்பட்டிருந்த பராமரிப்பு எண்ணை வைத்து அது எம்எச்370 விமானம் தான் என்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், ஸ்பானிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice