Home இந்தியா இந்தியா முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: வங்கிகள் முதலான முக்கியச் சேவைகள் பாதிப்பு!

இந்தியா முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: வங்கிகள் முதலான முக்கியச் சேவைகள் பாதிப்பு!

896
0
SHARE
Ad

31-1441042578-30-1430369140-bandhசென்னை – இன்று இந்தியா முழுவதும் ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ஆகையால் இன்று முக்கிய நகரங்களில் ஆட்டோ, டாக்சி முதலான வாகனங்கள் ஓடாது என்றும்,குறிப்பாக வங்கிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படவில்லை.

தொழிலாளர் சட்டம், சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம் போன்ற சில சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வர உள்ள சில சட்ட திருத்தங்களை எதிர்த்து 11 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் பாரத் பந்த் நடத்துகின்றன.

#TamilSchoolmychoice

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “தொழிற்சங்கங்களின் 12 அம்சக் கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் வரை ஏற்க அரசு தயாராக உள்ளது; ஆகையால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வேலை நிறுத்தத்திற்குப் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.வங்கி ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளதால் வங்கிச் சேவைகள் இன்று முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் 16-ஆவது பாரத் பந்த் இது என்பது குறிப்பிடத்தக்கது.