சிங்கப்பூர் – சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று சுமூகமான முறையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், பிரதமர் லீ சியான் லூங் தலைமையிலான ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி, முதல் முறையாக 89 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எதிர்கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்கிறது.
சிங்கப்பூரின் 50 ஆண்டு கால வரலாற்றில் ஆளும்கட்சியை எதிர்த்து 89 தொகுதிகளிலும் எதிர்கட்சிகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.
வரும் செப்டம்பர் 11-ம் தேதி, சிங்கப்பூர் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே, மக்கள் செயல் கட்சியின் இணை நிறுவனரான அமரர் லீ குவான் இயூ (பிரதமர் லீ சியான் லூங்கின் தந்தை) இல்லாமல் நடக்கும் முதல் பொதுத்தேர்தல் இதுவாகும்.
கடந்த மார்ச் 23-ம் தேதி, லீ குவான் இயூ காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.