Home உலகம் சீன இராணுவத்தில் 1.70 லட்சம் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப ஜி ஜிங்பிங் முடிவு!

சீன இராணுவத்தில் 1.70 லட்சம் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப ஜி ஜிங்பிங் முடிவு!

604
0
SHARE
Ad

chinese-armyபெய்ஜிங் – இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராகப் பெற்ற வெற்றியின் 70-ம் ஆண்டை, நினைவு கூறும் வகையில், சீனா சமீபத்தில் மிகப் பெரிய இராணுவப் பேரணியை நடத்திக் காட்டியது. அந்த பேரணியில் பேசிய, அதிபர் ஜிங்பிங் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் 3 லட்சம் பேர் வரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, 1.70 லட்சம் இராணுவ அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பதவிகளை வகித்து வரும் அதிகாரிகளை பணி நீக்குவதற்காக விருப்ப ஓய்வு உள்ளிட்ட திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

எனினும், இது தொடர்பான விரிவான அறிவிப்புகளை இந்த மாத இறுதியில் அரசு அறிவிக்கும் எனவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் 2017–ம் ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அதிபரின் இந்த முடிவு இராணுவத்தினரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கிடையே, இராணுவத்தில் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்காகவும், 2.3 மில்லியன் வீரர்களை கொண்டுள்ள சீனப் படையை மறுசீரமைப்பதற்காகவும், ஜிங்பிங் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.