Home Featured தொழில் நுட்பம் டுவிட்டரின் தலைமை பொறுப்பிற்கு இந்தியர் பத்மாஸ்ரீ வாரியரின் பெயர் பரிந்துரை!

டுவிட்டரின் தலைமை பொறுப்பிற்கு இந்தியர் பத்மாஸ்ரீ வாரியரின் பெயர் பரிந்துரை!

669
0
SHARE
Ad

twiterபுது டெல்லி – டுவிட்டரின் தலைமை நிர்வாகிக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அப்பதவிக்கு இந்தியர் பத்மாஸ்ரீ வாரியரின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் ஜேக் டோர்சேவிற்கு மாற்றாகத் தான் இந்த தேடல் படலம் துவங்கி உள்ளது.

யார் இந்த பத்மாஸ்ரீ வாரியர்?

விஜயவாடாவில் பிறந்த பத்மாஸ்ரீ வாரியர், டெல்லி ஐஐடி-யில் பொறியியல் படிப்பையும், அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அதன் பின்னர் அவர், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோவில், தலைமை தொழில்நுட்பம் மற்றும் திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், பத்மாஸ்ரீ வாரியாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை பொறுப்பிற்கு விரைவில் அதிகாரியை நியமிக்கும் நெருக்கடி டுவிட்டருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், முதலீட்டார்களும் அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, சமீபத்தில் கூடிய டுவிட்டர் நிர்வாகக் குழு, வாரியரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளது.

எனினும், இதுவரை யாரும் உறுதி செய்யப்படவில்லை என டுவிட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன.