Home கலை உலகம் நடிகை சரண்யா மோகன் பல் மருத்துவரை மணந்தார்

நடிகை சரண்யா மோகன் பல் மருத்துவரை மணந்தார்

573
0
SHARE
Ad

Saranya-Mohan-wedding-stills-3சென்னை – ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர்  சரண்யா மோகன். இவர் ‘ஈரம்’, ‘வேலாயுதம்’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தங்கை வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் நேற்று காலை ஆலப்புழாவில் திருமணம் நடைபெற்றது. இது இரு குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். காதல் திருமணம் அல்ல.

#TamilSchoolmychoice

இத்திருமணத்தில் சினிமா பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணத்திற்குப் பின், சரண்யா மோகன் சினிமா உலகை விட்டு விலகி, நடனப்பள்ளி தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.