Home உலகம் தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து 10 பேர் பலி; பலரைக் காணவில்லை!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து 10 பேர் பலி; பலரைக் காணவில்லை!

787
0
SHARE
Ad

7sep-search-on-for-eightசுஜா – தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள்: பலரைக் காணவில்லை.

தென் கொரியாவில் உள்ள தென் தீவான ஜெஜூவில் இருந்து 20–க்கும் மேற்பட்டோர் டால்பின் என்ற மீன்பிடி படகில் மீன் பிடிப்பதற்காகச் சுஜா எனும் தீவிற்கு நேற்று முன்தினம் சென்றனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் படகில் உள்ளவர்களுக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று காலை 6.25 மணிக்குச் சுஜா தீவுக்கு அருகே இந்தப் படகு விபத்தில் சிக்கிக் கவிழ்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலோரக் காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு மூன்று பேரைக் காப்பாற்றினர்.10 பேரைச் சடலமாக மீட்டனர். மேலும் பலரைக் காண்வில்லை.

அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது.