Home இந்தியா வருமான வரி ஏய்ப்பவர் பற்றித் தகவல் தருபவர்களுக்கு 15 லட்சம் பரிசு!

வருமான வரி ஏய்ப்பவர் பற்றித் தகவல் தருபவர்களுக்கு 15 லட்சம் பரிசு!

718
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_8032953740புதுடில்லி – வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்கள் அல்லது பொய்யான கணக்குக் காட்டுபவர்களைப் பற்றி இரகசியமாகத் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கை நாட்டில் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அளிப்பவர்களின் பெயர், ஊர் போன்ற விபரங்கள் வெகு இரகசியமாகப் பாதுகாக்கப்படும். தகவல் ஆதாரப்பூர்வமாக இருந்தால் மட்டுமே இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் ஏராளமானோர் கருப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனை மீட்பதற்கு மத்திய அரசு பல வகைகளில் முயற்சி எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியே இந்த அறிவிப்பாகும்.

வரி ஏய்ப்புச் செய்பவர்களைப் பற்றிய விவரங்களைப் பத்திரிக்கைகளில் வெளியிடவும் வருமான வரித்துறைஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.