கொழும்பு – இலங்கை நாடாளுமன்றத்தில் மேலும் 50 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளன.
ரணில் விக்கிரம சிங்கேவின் தலைமையில் 42 அமைச்சர்கள் செப்டம்பர் 4-ஆம் தேதியன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்கள் 48 பேருக்கும், இராசாங்க, பிரதி அமைச்சர்கள் 45 பேருக்குமான அனுமதியைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பாராளுமன்றத்தில் பெற்றிருந்தார்.
இருப்பினும், அன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கே தவிர 42 பேருக்கே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இன்னும் அமைச்சரவை தகுதியுள்ள 5 அமைச்சர்களும், ஏனைய 45 அமைச்சர்களும் நியமனம் பெறவுள்ளனர்.
அதன்படி, இன்னும் 50 அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.