Home இந்தியா ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் வருமானவரி சோதனை

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் வருமானவரி சோதனை

950
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்த அவரது சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வருமான வரித் துறை அதிகாரிகள் நுழைந்து சோதனையிட்டனர்.

அந்த சோதனை குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா உறவினரான விவேக் ஜெயராமன், பலரும் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதங்களை வருமானவரித் துறையினர் எடுத்துச் சென்றனர் எனத் தெரிவித்தார். இரண்டு மடிக்கணினிகள், மற்றும் இரண்டு விரலிகள் (‘பென்டிரைவ்’ எனப்படும் கணினி ஆவண சேமிப்பகம்) ஆகியவற்றையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் விவேக் கூறினார்.

விவேக் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனாவார்.

#TamilSchoolmychoice

எனினும் ஜெயலலிதாவின் பிரத்தியேக அறையை வருமானவரித் துறையினர் சோதனையிட அனுமதி கேட்டதாகவும், அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் விவேக் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் சுற்றிலும் காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.