Home நாடு குவாங் எங்கிடம் நிதியுதவி: தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உடனடி இடமாற்றம்!

குவாங் எங்கிடம் நிதியுதவி: தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உடனடி இடமாற்றம்!

1092
0
SHARE
Ad

Mak Mandin1ஜார்ஜ் டவுன் – பட்டர்வர்த்தில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றிற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பார்வையிட்டு, 100,000 நிதியுதவி வழங்கிய அடுத்த சில நாட்களில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தற்போது பினாங்கு மாநிலத் தலைவர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து பினாங்கு துணை முதல்வர் 2 பேராசிரியர் பி.இராமசாமி கூறுகையில்,

“அண்மையில், நானும், பினாங்கு முதல்வர் லிம் குவாங் எங், மாநிலக் கவுன்சிலர் லிம் ஹாக் செங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தனசேகரன் ஆகியோரும் மாக் மந்தின் தமிழ்ப்பள்ளியைப் பார்வையிட்டோம்.”

#TamilSchoolmychoice

“அப்பள்ளி லிம்மின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருவதால், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று நாங்கள் அங்கு சென்றோம். லிம் அப்பள்ளிக்கு 100,000 நிதியுதவி அளித்தார்.” என இராமசாமி தெரிவித்தார்.

மேலும், ராமசாமி கூறுகையில், “அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கடும் உழைப்பாளி. இப்போது அவருக்கு வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு வந்திருக்கிறது.”

“நாடாளுமன்ற உறுப்பினரும், முதலமைச்சருமான லிம் குவாங் எங் அப்பள்ளியைப் பார்வையிட்டது குற்றமா?”

“இனி அம்னோ தலைவர்கள் எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் போகட்டும், அங்கு அவர்களின் கட்சி கீதத்தை மாணவர்களுடன் சேர்ந்து பாடட்டும். அப்படி செய்வதால் தலைமை ஆசிரியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என்று இராமசாமி எப்எம்டியிடம் கூறியிருக்கிறார்.