Home Featured நாடு ஆயர் பூத்தேவில் போட்டியிட்டுப் பாருங்கள் – ஹாடிக்கு குவான் எங் சவால்!

ஆயர் பூத்தேவில் போட்டியிட்டுப் பாருங்கள் – ஹாடிக்கு குவான் எங் சவால்!

513
0
SHARE
Ad

lim-guan-eng-1-620x3201கோலாலம்பூர் – பினாங்கு மாநிலத் தொகுதியான ஆயர் பூத்தேவில் போட்டியிடுமாறு பாஸ் கட்சிக்கு ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலில், ஜசெக -வுக்கு எதிராக அக்கட்சி பெரும்பான்மை வகிக்கும் தொகுதிகளில், தங்களது மலாய்காரர்கள் அல்லாத ஆதரவாளர்கள் கொண்ட கூட்டணிக் கட்சிகளில் இருந்து வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக ஹாடி அவாங் அறிவித்ததைத் தொடர்ந்து, லிம் குவான் எங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹாடியின் அறிவிப்பை அறிந்து அதிர்ச்சியுற்றதாகக் கூறியுள்ள லிம், அம்னோ, தேசிய முன்னணி எதிரியாகப் பார்த்த காலம் கடந்து, தற்போது ஜசெக-வை எதிரியாகப் பார்ப்பது தான் புதிய பாஸ் கொள்கை போல் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice