Home Featured நாடு பொதுத்தேர்தலில் ஜசெக-வை எதிர்த்து பாஸ் போட்டியிடும் – ஹாடி அறிவிப்பு

பொதுத்தேர்தலில் ஜசெக-வை எதிர்த்து பாஸ் போட்டியிடும் – ஹாடி அறிவிப்பு

722
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – பாஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அமனா நெகாரா ( Parti Amanah Negara) ஆர்வத்தை வெளிபடுத்தியிருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில், ஜசெக போட்டியிடும் தொகுதிகளில் இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்த பாஸ் திட்டமிட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் அப்துல்  ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

“வரும் பொதுத்தேர்தலில் பாஸ் சார்பில் இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்துவதில் எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. அது குறித்து பாஸ் ஆய்வு செய்து வருகின்றது” என்று ஹாடி நேற்று மலாய் பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice