Home இந்தியா இந்தியப் பிரதமர் மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு 37 கோடி!

இந்தியப் பிரதமர் மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு 37 கோடி!

524
0
SHARE
Ad

Narendra_Modiபுதுடில்லி – ஒரு வருடத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் ரூ.37 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரக் கணக்கு தெரிவிக்கின்றது.

பிரதமர் மோடி பதவி ஏற்றதும் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அரசு முறைச் சுற்றுப் பயணமாக 20 நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்கு இதுவரை 37 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் அதற்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கும் படி ஓய்வு பெற்ற கமாண்டோ லோகேஷ் பத்ரா என்பவர் விவரம் கோரியிருந்தார். அதன் அடிப்படையில், இந்தத் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற வகையில் அதிகபட்சமாக  ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்குச் சென்ற வகையில் செலவு முறையே  ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.

பூடானுக்குச்  சென்ற போதுதான் மிகக் குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். அவ ருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஓராண்டில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

பதவியேற்ற முதல் ஆண்டில் பிரதமர் மோடி 53 நாட்கள் 17 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் 365 நாட்களில் 47 நாட்கள் 12 நாடுகளுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.