Home இந்தியா சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி, அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம் தொடக்கம்!

சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி, அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம் தொடக்கம்!

589
0
SHARE
Ad

jayalalitha (1)சென்னை – சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரியைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

இது, தமிழகத்தில் தொடங்கப்படும் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாகத் திறக்கப்படுள்ள இதில் மட்டுமே முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்றே தொடங்குகின்றன.

#TamilSchoolmychoice

இதுதவிர, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம்’ வழங்கும் திட்டமும் முதலமைச்சர் ஜெயலலிதாவால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 16 வகையான பொருட்களுடன் அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி அந்தத் திட்டத்தையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் பெண்களுக்கு இந்தப் பரிசுப் பெட்டகத்தை அவர் வழங்கினார்.

அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகத்தில் குழந்தை பராமரிப்புத் துண்டு, உடை, படுக்கை, பாதுகாப்பு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, சோப்பு, சோப்புப் பெட்டி, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கத் தேவையான பொருட்களை வைத்துக் கொள்ளப் பெட்டகம் என 16 வகையான பொருட்கள் உள்ளன.