Home இந்தியா நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து – டெல்லியில் அவசரத் தரையிறக்கம்!

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து – டெல்லியில் அவசரத் தரையிறக்கம்!

580
0
SHARE
Ad

air indiaடெல்லி – வாரணாசியில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானி சமயோசிதமாக டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கினார். அதனைத் தொடர்ந்து, விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில், சில பயணிகள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.