Home Featured நாடு புதிய கூட்டணியில் பாஸ் இடம்பெற வேண்டும் – பிகேஆர் முடிவு

புதிய கூட்டணியில் பாஸ் இடம்பெற வேண்டும் – பிகேஆர் முடிவு

584
0
SHARE
Ad

azmin ali mகோலாலம்பூர் – பக்காத்தானின் புதிய கூட்டணியில் பாஸ் கட்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என பிகேஆர் கருத்துத் தெரிவித்துள்ளது.

“ஆமாம். தலைவர் (டாக்டர் வான் அசிசா) இது பற்றி தெள்ளத் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்” என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி இன்று ராவாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலில், ஜசெக போட்டியிடும் தொகுதிகளை பாஸ் மலாய்காரர் அல்லாத வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய பக்காத்தான் கூட்டணியில் பாஸ் கண்டிப்பாக இடம்பெறாது என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் நேற்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அது அவரது தனிப்பட்ட கருத்து என அஸ்மின் அலி இன்று தெரிவித்துள்ளார்.