Home இந்தியா பயணிகளைக் கவர மெட்ரோ ரயிலில் சுற்றுலாப் பயண அட்டை அறிமுகம்!

பயணிகளைக் கவர மெட்ரோ ரயிலில் சுற்றுலாப் பயண அட்டை அறிமுகம்!

550
0
SHARE
Ad

1439959223279chennai-metro-rail-projectசென்னை – சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளைக் கவரும் வகையில் புதிய சுற்றுலா அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகர் மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் போக்குவரத்து முதல் கட்டமாகக் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை,ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை வெறும்

#TamilSchoolmychoice

10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இந்தப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டதால் பயணிகள் அதிக அளவு இதைப் பயன்படுத்தவில்லை.

ஆரம்ப நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஆர்வத்தோடு மட்டுமே பயணிகள் வந்தனர். வெறும் சுற்றுலா தலம் போலவே தான் மக்கள் மெட்ரோ ரயிலை நினைக்கின்றனர்.ஆகவே, போதிய பயணிகள் வரவு இல்லை.

பயணக் கட்டணமும், ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் வரத்து மிகவும் குறைந்து, நாள் ஒன்றுக்கு வருமானம் கிட்டத்தட்ட ரூபாய் 3 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 20 சதவீத கட்டணச் சலுகையுடன் 3 வகையான பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதாவது 12 முறை (7 நாட்கள் செல்லத் தக்கது), 50 முறை (30 நாட்கள் செல்லத் தக்கது), 100 முறை (60 நாட்கள் செல்லத்த க்கது) எனத் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில், பணத்தை ரீ-சார்ஜ் செய்து பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது.

இதற்குப் பயணிகளிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் சுற்றுலாப் பயண அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாப் பயண அட்டையைப் பெற ரூபாய் 150 செலுத்த வேண்டும். இதில் ரூபாய் 100 பயணக் கட்டணமாகவும், ரூபாய் 50 திருப்பித் தரத்தக்க வகையில் முன்பணமாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

சுற்றுலாப் பயண அட்டை மூலம் மெட்ரோ ரயிலில் ஒரு நாளில் ஒருவர் பல முறை பயணம் செய்யலாம். சுற்றுலாப் பயண அட்டை வாங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.