Home Featured இந்தியா கொச்சியிலும் மெட்ரோ இரயில் – மோடி தொடக்கி வைத்தார்!

கொச்சியிலும் மெட்ரோ இரயில் – மோடி தொடக்கி வைத்தார்!

1040
0
SHARE
Ad

கொச்சி -இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ நகர்ப்புற துரித இரயில் சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கேரளா மாநிலத்திலும் இயங்கத் தொடங்கின.

ஏற்கனவே, புதுடில்லி, பெங்களூரு, சென்னை, ஆகிய நகர்களில் மெட்ரோ சேவைகள் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் நேற்று இந்த சேவைகளைத் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் கேரள முதல்வர் பினராய் விஜயன், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, கேரள மாநில ஆளுநர் சதாசிவம், ஆகியோருடன் இணைந்து மெட்ரோ இரயிலில் மோடி பயணம் செய்தார்.

பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன்…