Home Featured கலையுலகம் சூப்பர் சிங்கர் ஜூனியர் 5: பிரித்திகா வெற்றி வாகை சூடினார்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5: பிரித்திகா வெற்றி வாகை சூடினார்!

1200
0
SHARE
Ad

சென்னை – விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிச்சுற்று, நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மனோ, சித்ரா, சுபா, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோரோடு, சிறப்பு நடுவராக பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவனும், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பிரித்திகா, கௌரி, தனுஷ், பவின், மோனிக்கா என 5 போட்டியாளர்கள் களமிறங்கிய இறுதிச்சுற்றில் ஒவ்வொரு பாடகரும் இரண்டு பாடல்கள் பாடினர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நடுவர்களின் மதிப்பீடுகள், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் பிரித்திகா 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி வாகை சூடினார். அவருக்கு 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற பவினுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றும், மூன்றாம் இடத்தில் வந்த கௌரிக்கு 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.