Home Featured உலகம் இலண்டன் தீவிபத்து : மரண எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது

இலண்டன் தீவிபத்து : மரண எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது

1226
0
SHARE
Ad

இலண்டன் – இங்கு மேற்கு இலண்டன் வட்டாரத்திலுள்ள கிரென்பெல் (Grenfell) என்ற 24 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை ஜூன் 10-ஆம் நிகழ்ந்த தீவிபத்தைத் தொடர்ந்து, அந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என இலண்டன் காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.

தீவிபத்தைத் தடுக்க முடியாதது, தாமத நடவடிக்கைகள், எத்தனை பேர் இறந்தது என்பது குறித்த இறுதி நிலவரங்களை இவ்வளவு காலங்கடத்தி வெளியிடுவது என்பதுபோன்ற காரணங்களால் இலண்டன் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தீயில் கருகிய கட்டிடத்தில் மேலும் சில சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்ற ஐயம் நிலவுவதால், மரண எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.