Home Featured நாடு எம்ஐஇடி அறக்காப்பாளராக விக்னேஸ்வரன் தேர்வு!

எம்ஐஇடி அறக்காப்பாளராக விக்னேஸ்வரன் தேர்வு!

893
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவின் கல்வி அமைப்பான எம்.ஐ.இ.டி.யின் 30-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (17 ஜூன் 2017) நடைபெற்றது.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் ஏற்கனவே இருந்து வரும் அறக் காப்பாளர்களோடு, எம்.ஐ.இ.டி.யின் புதிய அறக் காப்பாளராக மஇகா தேசிய உதவித் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் (படம்) முன்மொழியப்பட்டு ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்

எம்ஐஇடியின் தலைவராக முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

ஏற்கனவே அறக்காப்பாளர் பொறுப்பில் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, டான்ஸ்ரீ மாரிமுத்து ஆகியோர் உள்ளிட்ட 10 பேர் எம்.ஐ.இ.டி.யின் அறக்காப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.