புதுடில்லி – ஐ.எஸ்.தீவிரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு முஸ்லிம் அமைப்புகள் மதத் தடை விதித்துள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சில பகுதிகளைக் கைப்பற்றித் தனிநாடு அமைத்து, அங்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்திக் கொடுங்கோல் ஆட்சி செய்து வருகின்றனர்.
மேலும்,அப்பாவி பொதுமக்களைச் சிறைப்பிடித்துக் கொடூரமான முறையில் அவர்களைக் கொன்று, இணையத்தில் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிடுகின்றனர்.
இத்தகைய கொடூரச் செயல்கள் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது என்று முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும்,ஜமா மஸ்ஜித் ஷாகி இமாம், இந்திய உலமா கவுன்சில், அஜ்மீர் தர்கா, நிஜாமுதீன் அவுலியா தர்கா, தாருல் உலாம் முகமதியா, ஜமீயாதுல் உலமா மகாராஷ் டிரா, ஜமீயாத் கல் ஹதீஸ் மும்பை, ரஷா அகாடமி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இமாம்கள் 1050 பேர் கையெழுத்திட்டு மதத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.