Home Featured நாடு ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயமானதில் நீடிக்கும் மர்மம் – இராணுவம் களமிறங்கியுள்ளது!

ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயமானதில் நீடிக்கும் மர்மம் – இராணுவம் களமிறங்கியுள்ளது!

768
0
SHARE
Ad

orang asli kidsகோலாலம்பூர் – காணாமல் போன 7 ஓராங் அஸ்லி குழந்தைகளைத் தேடும் நடவடிக்கையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மலேசிய இராணுவமும் களமிறங்கியுள்ளது.

இது குறித்து இராணுவப் படைகளின் தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி முகமட் சின் கூறுகையில், நாங்கள் இராணுவ வீரர்களையும், ஹெலிகாப்டர்களையும், கே9 பிரிவுகளையும் குழந்தைகளைத் தேடும் நடவடிக்கையில் அமர்த்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தேடும் நடவடிக்கையில், அப்பகுதி கிராமவாசிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice