Home உலகம் எட்டி உதைத்த பெண் பத்திரிக்கையாளர் – ஹங்கேரியில் சிரியா மக்களின் பரிதாப நிலை!

எட்டி உதைத்த பெண் பத்திரிக்கையாளர் – ஹங்கேரியில் சிரியா மக்களின் பரிதாப நிலை!

704
0
SHARE
Ad

Hungary-Migrants-Reporterபுடாபெஸ்ட் – உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளின் மக்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை ஐரோப்பிய நாடுகள் உடனடியாக செய்வது முடியாத காரியம் என்றாலும், குறைந்தபட்சம் அவர்கள் சுயமரியாதையுடனாவது நடத்தப்பட வேண்டும் என்பது உலக நாடுகளில் உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் அகதிகள், கடல் வழிப்பயணம், சட்ட விரோதப் பயணங்கள் மூலம் தங்கள் உயிரை இழப்பது மட்டுமல்லாமல், அழையா விருந்தாளியாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்வதால் தங்கள் சுயமரியாதையையும் இழக்க வேண்டி உள்ளது. அத்தகைய சம்பவம் ஒன்று உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹங்கேரியின் ரோஸ்கி வில்லேஜ் எனும் பகுதியில் ஆயிரக்கணக்கான சிரியா அகதிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், உணவிற்காகவும் ஹங்கேரி அரசின் அறிவிப்பினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது சில சட்ட ரீதியான ஆவண மதிப்பிடல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர்களும் இதனை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

Hungary-Migrants-Reporter2தங்கள் பெயர்களை பதிவு செய்தால், நிரந்தரமாக மறுவாழ்வு முகாம்களில் இருக்க வேண்டி வருமோ என பயந்த அகதிகள் பலர், கட்டுப்பாடுகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறை தடுத்துக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு நடக்கும் சம்பவங்களை ஒளிபரப்பி வந்த பெண் பத்திரிக்கையாளர், ஒரு அகதிச் சிறுமியை காலால் எட்டி உதைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர், கைக்குழந்தையுடன் காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் அகதியையும் எட்டி உதைக்க முயற்சித்துள்ளார். இந்த களேபரத்தில் அந்த குழந்தையும், அதன் தந்தையும் கீழே விழுகின்றனர். பெண் பத்திரிக்கையாளரின் செயலை மற்றொரு பத்திரிக்கையாளர் படம் பிடித்து ஒளிபரப்பி உள்ளார்.

உலக அளவில் கடும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. ஹங்கேரியிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த பெண் பத்திரிக்கையாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.