கோலாலம்பூர் – இந்த ஆண்டு 300 சிரிய அகதிகள் மலேசியாவிற்கு வரப் போவதாக துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் 3,000 சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதாக மலேசியா தன்னார்வமாக ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மே28-ம் தேதி காலை 10 மணியளவில் மலேசிய விமானப் படையைச் சேர்ந்த 3 சிறப்பு விமானங்கள் மூலம் லெபனானில் உள்ள பெக்கா வேலி அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் மலேசியாவிற்கு அழைத்துவரப்படவுள்ளார்கள் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மலேசியாவிற்கு அழைத்து வரப்படுவதற்கு முன் அவர்களுக்கு உடல்பரிசோதனை, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய மலேசிய உள்துறை அமைச்சு, குடிநுழைவு இலாகா மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.