மதுரை – ஸ்டாலினுக்கு எதிராக முக அழகிரி, சமீபத்தில் பரபரப்புப் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் திமுக படுதோல்வி அடையும் என்று கூறியிருந்தார். ஸ்டாலினும் அதற்கு பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மதுரை திமுக நிர்வாகிகள், அழகிரிக்கு எதிராக கூட்டம் ஒன்றை நடத்தி அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர்.
மேலும் அவர்கள், பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், “ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் அழகிரி இயங்குகிறார்” என்றும் தெரிவித்தனர்.
இவர்களின் இந்த செயல் ஸ்டாலினை சமாதானப்படுத்தி இருந்தாலும், கருணாநிதியை கடுமையான அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. தேர்தல் சமயம் நெருங்குவதால், எப்படியும் அழிகிரியை சமாதானப்படுத்தி கட்சிக்குள் கொண்டு வந்துவிடலாம் . அழிகிரியின் வரவு தென் மாவட்டங்களில் கூடுதல் பலம் சேர்க்கும் என கருணாநிதி திட்டமிட்டிருந்த சமயத்தில், மதுரை நிர்வாகிகளின் செயல் புதிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதால் தான் அவர், நிர்வாகிகளை உடனடியாக அழைத்து, தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.
“ஸ்டாலினை சமாதானப்படுத்துவதற்காக கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக செயல்பட்டு, குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்று அவர் கடிந்து கொண்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பச் சண்டையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அறுபட்டுக் கொண்டதாக மதுரை நிர்வாகிகள் புலம்பித் தவிக்கின்றனர்.