அரவிந்த்சாமியால்தான் படம் வெற்றி என்றாலும், தற்போது 5 மொழிகளில் அந்தத் திரைப்படத்தை மீண்டும் படமாக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதாக மோகன் ராஜா கூறியுள்ளார்.
இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் ராம்சரண், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், மராத்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் என முன்னணி கதாநாயகர்கள் இந்தப் படத்தை மொழிமாற்றம் செய்து உருவாக்க ஆர்வம் காட்டியுள்ளனர். பெங்காலி மொழியிலும் மறுபதிப்பாக்க சிலர் ஆர்வம் காட்டியுள்ளனராம்.
இதில் இந்தியில் சல்மான் கான் நடிப்பில் மோகன் ராஜாவே இயக்கக் கூடும் என்ற ரீதியில் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியே நடிக்கக்கூடும். ஏற்கனவே, பம்பாய், ரோஜா படங்களின் மூலம் இந்தித் திரையுலகிலும் நன்கு அறிமுகமானவர்தான் அரவிந்த்சாமி.
ஐந்து மொழிகளில் மறுபதிப்பாகலாம் என்பது ஒருபுறமிருக்க, வெளியான பத்தே நாட்களில் 50 கோடி வசூலை தனிஒருவன் அள்ளிவிடும் என்பது மற்றொரு தகவல்.
இந்த வாரமும் முக்கிய படங்கள் ஏதும் மோதுவதற்கு களத்தில் இல்லை என்ற காரணத்தால், தொடர்ந்து தனிஒருவன் இரசிகர்களை ஈர்த்து மேலும் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.