Home கலை உலகம் ‘தனி ஒருவன்’ இந்தியில் மறுபதிப்பு : ஜெயம் ரவி வேடத்தில் சல்மான்கான்!

‘தனி ஒருவன்’ இந்தியில் மறுபதிப்பு : ஜெயம் ரவி வேடத்தில் சல்மான்கான்!

738
0
SHARE
Ad

thanioruvan_2531391fமும்பை – ஜெயம் ரவி- நயன்தாரா – அரவிந்த் சாமி கூட்டணியில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல அதிரடிப் படம் பார்த்த திருப்தியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.இப்படத்தின் வெற்றியால் முன்னணிக் கதாநாயகர்கள் வரிசையில் வந்திருக்கிறார் ஜெயம் ரவி.

இப்படம், வெளியான ஒரு வாரத்தில் சுமார் 13 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இப்படத்தின் அமோகமான வெற்றியைப் பற்றியும் அதில் ஜெயம் ரவியின் நடிப்பைப் பற்றியும் கேள்விப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான்கான் படத்தைப் பார்க்கவும் அதை இந்தியில் மறுபதிப்பு (ரீ மேக்) செய்யவும் ஆர்வமாக இருப்பதாகப் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

அதன்படி இப்படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டால் ஜெயம் ரவி வேடத்தில் சல்மான் கானும், அரவிந்த் சாமி வேடத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

சல்மான்கானிற்கு மறுபதிப்புப் படங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி! அவரின் சமீபகால வெற்றிப் படங்கள் எல்லாமே தென்னிந்தியப் படங்களின் மறுபதிப்பு தான்.

தெலுங்கில் மகேஷ்பாபுவின் போக்கிரி, ரவி தேஜாவின் கிக், ரெடி மற்றும் மலையாளத்தில் திலீப் நடித்த பாடிகார்ட் போன்ற படங்களின் மறுபதிப்பில் சல்மான் நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்துமே இந்தியில் வசூலை வாரிக் கொட்டின.

ஆனால், அவர் இதுவரை தமிழ்ப்பட மறுபதிப்பில் நடித்ததில்லை.

தனி ஒருவன் படத்தை இந்தியில் எடுத்து அதில் அவர் நடித்தால், அதுதான் அவர் நடிக்கும் முதல் தமிழ் மறுபதிப்புப் படமாக இருக்கும்.