Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

523
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

  • கோலாலம்பூர்: “2.6 பில்லியன் நன்கொடை மீதான விசாரணையை நஜிப் தடுத்து நிறுத்த முயற்சி செய்வது அந்தப் பணம் முறைகேடாகப் பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது” – மகாதீர் மீண்டும் சாடல்!
  • கோலாலம்பூர்: 250 மலாய் இன அமைப்புகள் செப்டம்பர் 16 சிவப்பு ஆடை பேரணிக்கு ஆதரவு!
  • கோலாலம்பூர்: “பெர்சே பேரணிக்கு ஒரு விதி, சிவப்பு ஆடை பேரணிக்கு இன்னொரு விதியா? ஏன் இந்த இரட்டைப் போக்கு” உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிட்டுக்கு லிம் கிட் சியாங் கேள்வி
  • கோலாலம்பூர்: “இன்னும் ஒரு மாதத்தின் பெர்சே பேரணி குறித்த கணக்கு வழக்குகள் தாக்கல் செய்வோம்” ஏற்பாட்டாளர்கள் உறுதி!
  • கோலாலம்பூர்: “நாடாளுமன்றப் பொதுக் குழுவில் தாக்கல் செய்யப்பட்ட 1எம்டிபி இரகசியத் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டது அதிர்ச்சியளிக்கின்றது” – 1எம்டிபி அறிக்கை
  • கூச்சிங்: காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘எம்.வி.சா லியான்’ சரக்குக் கப்பலைத் தேட மலேசிய கடல்துறை இலாகா தீவிரம்!
  • கோலாலம்பூர்: சிவப்பு ஆடை பேரணி குறித்த கருத்துகளுக்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் நாளை காவல் துறையினரால் விசாரிக்கப்படுவார்