Home இந்தியா மெக்கா கிரேன் விபத்து: இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்!

மெக்கா கிரேன் விபத்து: இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்!

567
0
SHARE
Ad

modiபுதுடில்லி – சவுதி அரேபியா புனித நகரான மெக்காவில் கட்டுமானப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் முறிந்து விழுந்து 107 பேர் பலியானார்கள்.

இந்தப் பயங்கர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “மெக்கா விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும்,துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியும் இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.