Home உலகம் 10,000 சிரியா அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம்: ஒபாமா உத்தரவு!

10,000 சிரியா அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம்: ஒபாமா உத்தரவு!

603
0
SHARE
Ad

Tamil-Daily-News_62003290654வாஷிங்டன் – உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த 10,000 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

வரும் நிதியாண்டில், அமெரிக்கா குறைந்தபட்சம் 65,000 சிரியா அகதிகளையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அமெரிக்காவைச் சேர்ந்த 65,000 பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு, ஒபாமா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒபாமா, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் ,“சிரியாவில் உள்நாட்டுப் போரால் 40 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அத்தனை பேருக்கும் அமெரிக்கா அடைக்கலம் கொடுக்க முடியாது.

சென்ற நிதியாண்டில் அமெரிக்கா 1,800 சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. வரும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 10,000 சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு  ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மீதியுள்ள அகதிகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அமெரிக்கா தாராளமாக உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை அமெரிக்கா அனைத்துலக அகதிகள் 70,000 பேருக்கு அடைக்கலம் அளித்திருக்கிறது. ஆனால், சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு அமெரிக்கா மிகவும் யோசிக்கிறது.

காரணம், அகதிகள் என்ற போர்வையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம்.

ஐநா பதிவு செய்த அகதிகளைக் கூட கடுமையான சோதனைக்குப் பின்பே ஏற்றுக் கொள்கிறது அமெரிக்கா.