Home இந்தியா கங்கையைத் தூய்மைப்படுத்த மாதா அமிர்தானந்தமயி 100 கோடி நிதி: மோடி நன்றி!

கங்கையைத் தூய்மைப்படுத்த மாதா அமிர்தானந்தமயி 100 கோடி நிதி: மோடி நன்றி!

1146
0
SHARE
Ad

12-1442004825-mathaaminewwwwwwபுதுடில்லி- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கு ரூ.100 கோடிக்கான காசோலையை மாதா அமிர்தானந்தமயி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இன்று வழங்கினார்.

மாதா அமிர்தானந்தமயி மடம் ‘அமல பாரதம்’ என்னும் திட்டத்தைக் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கி, அதன் மூலம் பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவை தொடர்பான நலத் திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தவிர ஆண்டுதோறும் பம்பை நதியைத் தூய்மைப்படுத்தும் பணியையும் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் தன்னார்வுத் தொணடர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் மாதம் டில்லி சென்றிருந்த மாதா அமிர்தானந்தமயி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய போது, சுற்றுச்சூழல் நலத் திட்டங்களுக்காக மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுக்காக மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதியுதவிக்கான காசோலையை மாதா அமிர்தனந்தமயி வழங்கியுள்ளது பாராட்டிற்குரிய விசயமாகும்.

இத்தகைய பெருந்தன்மைக்காக மாதா அமிர்தானந்தமயிக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “மாதா அமிர்தானந்தமயி சேவை செய்வதில் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர். அவர் தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.100 கோடியை நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் நன்கொடையாக அளித்துள்ளார். அவருக்கு எனது நன்றி” எனப் பதிவு செய்துள்ளார்.