Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

538
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

கோலாலம்பூர்: செப்டம்பர் 16 சிவப்பு ஆடை பேரணியில் கலந்து கொள்ள உறுப்பினர்களைத் திரட்டுமாறு, தொகுதிகளுக்கு அம்னோ தலைமையகம் கடிதம் அனுப்பியது!

கோலாலம்பூர்: “அல்தான்துயா குறித்த புதிய தகவல்கள் என்மீதான சதியாலோசனை” நஜிப் திட்டவட்டம்!

#TamilSchoolmychoice

பினாங்கு: “அல்தான்துயா கொலை குறித்து அல் ஜசீரா ஆவணப்படம் வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள் குறித்த மறு விசாரணை தேவை” – ஜசெக வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் வலியுறுத்து!

கோலாலம்பூர்: “1எம்டிபி விவகாரம் குறித்து அரச மலேசிய விசாரணை ஆணையம் தேவை” – மலேசிய வழக்கறிஞர் மன்றம் வேண்டுகோள்!

சிட்னி: “அல்தான்துயா கொலை குறித்த பின்னணி சம்பவங்களின் நம்பகத்தன்மையை சாதாரணமாக ஒதுக்கித் தள்ள முடியாது – விசாரணை தேவை” ஆவணப் படம் தயாரித்த அல்ஜசீரா செய்தியாளர் வலியுறுத்து!

கோலாலம்பூர்: “அல் ஜசீரா ஆவணப் படம் பொய்களையும், திரித்துக் கூறும் தகவல்களையும் கொண்டது” – தொடர்பு, பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக் கூறுகின்றார்.