Home Featured இந்தியா ஜபுவா உணவக வெடி விபத்து  – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

ஜபுவா உணவக வெடி விபத்து  – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

544
0
SHARE
Ad

MP2ஜபுவா – மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

எரிவாயு உருளை வெடித்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், உணவகத்தின் அருகில் இருந்த வீடு ஒன்றில் எரிவாயு உருளையுடன் ஜெலட்டின் குச்சிகள் இணைக்கப்பட்டு இருந்ததாகவும், அது இயக்கப்பட்டதனால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு உருளையில் பாறைகளை வெடிப்பதற்குப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் எப்படி வந்தது? இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் ஏதும் உள்ளனவா? என தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.