Home Uncategorized எப்போது தேர்தல்? பட்ஜெட்டுக்கு முன்பா அல்லது பின்பா?

எப்போது தேர்தல்? பட்ஜெட்டுக்கு முன்பா அல்லது பின்பா?

986
0
SHARE
Ad

அடுத்த பொதுத் தேர்தல் எப்போது என்ற ஆரூடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அடுத்த பொதுத் தேர்தல் நாட்டின் வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கு (பட்ஜெட்) முன்பாக நடைபெறுமா அல்லது அதற்குப் பின்னர் நடைபெறுமா என அரசியல் ஆய்வாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பட்ஜெட்டுக்கு பின்பு என்றால் அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் எஸ்.ஆர்.பி பள்ளித் தேர்வுகள் பொதுத் தேர்தலுக்கு இடையூறாக இருக்கும். செப்டம்பர் முதல் வாரத்தில் யூபிஎஸ்ஆர் தேர்வுகள் முடிந்தவுடன் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது சாத்தியம் என்றாலும், பட்ஜெட் அறிவிப்புக்களின் வழி பல கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து, வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு பிரதமர் நஜீப்புக்கு இருக்கும் அருமையான வாய்ப்பை அவர் நழுவ விடுவாரா என்பதும் சந்தேகமே.