புதுடில்லி – இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளார்.
ஜெனீவாவில் இன்று தொடங்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா-வின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ரணில் விக்கிமசிங்கே இந்தியா வந்து பிரதமரைச் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய வருகையை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கைக் கடற்பரப்பில் எல்லைமீறி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.