Home இந்தியா அதிமுக-வை மகத்தான வெற்றி பெறச் செய்வதே தலையாய பணி: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!

அதிமுக-வை மகத்தான வெற்றி பெறச் செய்வதே தலையாய பணி: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!

863
0
SHARE
Ad

jayalalithaசென்னை – விரைவில் நடைபெற உள்ள தமிழகச் சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வை மகத்தான வெற்றி பெறச் செய்வதே தொண்டர்களின் தலையாய பணியாக இருக்க வேண்டும் என்று தொணடர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் அதிமுக-வை அமோக வெற்றி பெறச் செய்ய சூளுரை ஏற்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டுள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 107வது பிறந்தநாளைமுன்னிட்டு, 18.9.2015 முதல் 20.9.2015 வரை மூன்று நாட்கள் ‘பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ நடத்துமாறு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி அமைப்புகளுக்கு  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இது தொடர்பாகக் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதமும் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:”அண்ணாத்துரை, தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செய்வது தமிழுக்குச் செய்வது போன்றது.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் இத்தகைய பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். மேலும், நாடு போற்றும் அளவிலான அதிமுக-வின் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வை மகத்தான வெற்றி பெறச் செய்வதே ஒவ்வொரு தொணடரது தலையாய பணி என்று பேரறிஞர் அண்ணாத்துரையின் பிறந்தநாளில் சூளுரை ஏற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.