Home Featured நாடு அல்தான்துயா கொலை: பெயரில் உள்ள களங்கத்தை நஜிப் போக்க வேண்டும் – மகாதீர் கருத்து!

அல்தான்துயா கொலை: பெயரில் உள்ள களங்கத்தை நஜிப் போக்க வேண்டும் – மகாதீர் கருத்து!

590
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் நாட்டின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், அவரது அரசாங்கமும் போக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“அந்தக் கொலையில், ‘மூடிமறைத்தது’, காவல்துறையின் தலையீடு, அந்த கொடூரக் கொலையில் அப்துல் ரசாக் பஜிண்டா எந்தவித குற்றமும் செய்யவில்லை என கூறுபடுவதற்கு ஆதாரம் அளிக்கப்பட வேண்டும்”

“சட்டத்துறைத் தலைவர் சம்மேளம் உட்பட நீதித்துறையும் இந்தக் கொலையில் தங்களது பெயர் மீதான களங்கத்தை போக்க வேண்டும். குறிப்பாக ரசாக் பஜிண்டாவின் விடுதலை மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமான சட்டத்துறைத் தலைவரின் மேல்முறையீடு”

#TamilSchoolmychoice

“அவர்கள் மீண்டும் முயற்சி செய்தார்கள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது” என்று இன்று தனது வலைத்தளத்தில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் அல் ஜசீரா செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய ‘மலேசியாவில் கொலை’ என்ற ஆவணப்படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மகாதீர்,

“வெளிநாட்டில் வாழும் மலேசியர்களிடம் உங்கள் நாட்டிற்கு என்ன தான் நேர்ந்தது என்று கேட்கப்பட்டு வருகின்றது. அல் ஜசீராவின் சமீபத்திய பாகம் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.”

“இந்த ஆவணப்படத்தை அரசாங்கம் உடனடியாக கருத்தில் கொண்டு நமது பெயரின் களங்கத்தைப் போக்க வேண்டும். மலேசியாவில் அந்த ஆவணப்படத்தை தடை செய்வதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது”

“காரணம் அந்த ஆவணப்படம் ஏற்கனவே வேகமாகப் பரவி உலகம் முழுவதும் சென்றடைந்துவிட்டது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.